search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்-  அமைச்சர் பேச்சு
    X

    அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாெமாழி தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்- அமைச்சர் பேச்சு

    • தண்ணீர் வரத்து அதிகமுள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
    • கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கல்லணையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ள தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகிேயார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசியதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர்அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து உபரி நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.80 லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளது.

    எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

    காவிரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல்அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாய கரமான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்த்திட வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளில் குழந்தைகளை விளையாடச்செல்லாமல் பெற்றோர்கள்தங்களது குழந்தைகளை பாதுகா ப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நமது மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட அளவிலான குழு, கோட்ட அளவிலான குழுக்கள், வட்ட அளவிலான குழுக்கள், சரக அளவினால் குழுக்கள் முதல்நிலை பணியாற்றுபவர்கள், கால்நடை பராமரி ப்பாளர்கள், பாம்பு பிடிப்பவர்கள், மரம்வெட்டு பவர்கள், போதுமான ஜெனரேட்டர், கரையை விட்டு தண்ணீர் வெளியே வராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையி ல்வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காவல்துறை, வளர்ச்சித்துறை, வருவா ய்த்துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, மின்சார துறை மற்றும் அனைத்து துறைகளும்ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

    மேலும் பொதுமக்கள் பேரிடர்காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிகபாதுகாப்பு முகாம்அ மைக்கப்ப ட்டுள்ளது.

    மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறைதயார்நிலையில் உள்ளது. பாதுகாப்பு முகாமில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும்தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115, வாட்ஸ் அப்எண். 94458 69848 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை வெள்ளத்தினால்ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த்,வேளாண்மை உழவர் நலத்துறை இணை இயக்குனர்ஜஸ்டின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×