search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் மாணவிகள் விவசாயிகளிடம் பணிகள் குறித்து கலந்துரையாடல்
    X

    மாணவிகள் விவசாய பணிகள் குறித்து முன்னோடி விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

    வேளாண் மாணவிகள் விவசாயிகளிடம் பணிகள் குறித்து கலந்துரையாடல்

    • கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்ட பணிகள் குறித்த தொடக்க விழா நடந்தது.
    • மாணவிகள் கிராம பகுதிகளில் தங்கி, முன்னோடி விவசாயி களிடம் விவசாயத்தின் பணிகளின்அனுபவங்களை கேட்டறிந்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே கோபுர ராஜகோபுரம் கிராமம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தஞ்சை ஆர். வி.எஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் 11 மாணவ மாணவிகள், கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்ட பணிகள் குறித்த தொடக்க விழா நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் சூரிய பிரியா, பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

    நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம பகுதிகளில் தங்கி, முன்னோடி விவசாயி களிடம் விவசாயத்தின் பணிகள் குறித்தும், அனுப வங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் பாரதிராஜா, திவ்யா, ரம்யா, ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாணவிகள் செயல்பட்டனர்.

    ஏற்பாடு களை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஜெனோ அபிஷா, கன்னிகா லாவண்யா, ஜெயதாரணி கிருத்திகா, லட்சுமி ஸ்ரீ உள்பட கலந்து கொண்டனர்.

    Next Story
    ×