என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விளாத்திகுளத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
  X

  உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு வேளாண் கருவிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

  விளாத்திகுளத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விளாத்திகுளத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  விளாத்திகுளம்:

  விளாத்திகுளம் வட்டார வேளாண் துறை சார்பில் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கே.குமரெட்டையாபுரம், கீழ விளாத்திகுளம், தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு வேளாண் துறை கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் பல்வேறு விவசாய உபகரணங்கள் விவசாய குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.

  இந்த ஆண்டு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு கூட்டுப் பண்ணையத்திட்டத்தில் குழு ஒன்றுக்கு அரசு மானியத்துடன் ரூ.5 லட்சம் மதிப்பில் டிராக்டருடன் பொருத்தகூடிய வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி விளாத்திகுளம் வேளாண் அலுவலகத்தில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தலைமை தாங்கினார்.

  வேளாண்மை துணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ், விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, கே.குமரெட்டையாபுரம், கீழ விளாத்திகுளம், தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை வழங்கினார்.

  நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், நகர செயலாளர் வேலுசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் வட்டார வேளாண்மை துணை அலுவலர் முத்துச்சாமி, விளாத்திகுளம் வட்டார வயலக ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு, உதவி வேளாண்மை அலுவலர்கள் சுரேஷ், அருள் பிரகாஷ், சரண்யா, சுதாகர், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் பயிர் அறுவடைபரிசோதனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×