என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வை கண்டித்து நெல்லையில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    மின் கட்டண உயர்வை கண்டித்து நெல்லையில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
    • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக மக்களை வாட்டி வதைக்கும் வகையில் தி.மு.க. அரசு கடுமையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மின்கட்டண உயர்வை அறிவித்துள்ள தி.மு.க. அரசை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×