என் மலர்
உள்ளூர் செய்திகள்

பால் பாக்கெட்டுகளை மாலையாக அணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- 500-க்கும் மேற்பட்டோா் மழையையும் பொருட்படுத்தாமல் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
- ஆர்ப்பாட்டத்தில் விலைவாசியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன
ஊட்டி,
விலை உயர்வை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது மழை பெய்தது. இருந்த போதிலும் யாரும் கலையாமல் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
ஆர்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் கோபால கிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் பேசும் போது, அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது.
இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியே வெற்றிபெறும் என்றார்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா் காய்கறி, பால் பாக்கெட்களை மாலையாக அணிந்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 500-க்கும் மேற்பட்டோா் மழையையும் பொருட்படுத்தாமல் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன
நகர செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் நடந்த ஆர்பாட்டத்தில் குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், ஊட்டி ஒன்றிய செயலாளர் கடநாடு குமார், கோத்தகிரி ஒன்றியசெயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன், குன்னூர் ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகர செயலாளரும், கிளைசெயலாளருமான கார்த்திக், இளைஞர் அணி பிரபு துர்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






