என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூரில்அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    சூலூரில்அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்திள் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திமுக அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

    சூலூர்,

    சூலூரில் அதிமுக கட்சியினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்திள் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில உலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தோப்பு அசோகன் தலைமை தாங்கினார்.

    சூலூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் கந்தவேல் மற்றும் குமரவேல் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திமுக அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் பிரபு ராம், சூலூர் ஒன்றிய துணை செயலாளர் அங்கமுத்து, ஒன்றிய அவைத் தலைவர் அங்கண்ணன், சூலூர் நகர செயலாளர் கார்த்திகை வேலன், கலங்கல் ஊராட்சித் தலைவர் ரங்கநாதன், செம்மாண்டாம்பாளையம் செல்வராஜ், மீனவர் அணி செயலாளர் ஆறுமுகம், கலங்கல் முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜ், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு வினோத், ஒட்டர்பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவர் தண்டபாணி, பட்டணம் கம்பர்தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×