என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அணிகள் அல்ல பிணிகள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
    X

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அணிகள் அல்ல பிணிகள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    • அ.தி.மு.க.வில் 4 அணிகள் கிடையாது.
    • தி.மு.க.வில் உழைப்பவருக்கு மரியாதை இல்லை.

    சென்னை :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் 4 அணிகள் கிடையாது. எந்த பிரிவும் இல்லை. பிளவும் இல்லை. கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலர் நீக்கப்பட்டு உள்ளார்கள். 66 எம்.எல்.ஏ.க்களில் 62 பேர் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறார்கள். தலைமைக்கழக நிர்வாகிகள் 75 பேரும், மாவட்ட செயலாளர்கள் 75 பேரும் கட்சியில்தான் இருக்கிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அணிகள் அல்ல பிணிகள்.

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது உலகுக்கே தெரியும். அதனால்தான் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது சட்டப்படியான விஷயம்தான்.

    தி.மு.க.வில் உழைப்பவருக்கு மரியாதை இல்லை. புதிதாக வந்தவர்களுக்கு கூட பதவிகள் வழங்கப்படுகிறது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். தி.மு.க.வில் குமுறல் எழுந்துள்ளது. அது உள்ளக்குமுறல் நீறு பூத்த நெருப்பு. அதன் வெளிப்பாடாகத்தான் முதலில் ஒரு பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது. இன்னும் நிறைய பேர் வருவார்கள். அந்த அளவுக்கு அந்த கட்சியின் நிலைமை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×