என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
  X

  திருவையாறு காவிரி புஷ்ய மண்டபத்துறையில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

  காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கல பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபட்டனர்.
  • ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது போட்ட பழைய மாலையை தண்ணீரில் விட்டு பெரியவர்களிடம் ஆசி வாங்கினர்.

  தஞ்சாவூர்:

  தமிழகத்தில் இன்று ஆடி 18-ம் நாள் விழா அதாவது ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரி கரைகளில் ஆடிபெருக்கு விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  தஞ்சையில் பெருக்கெடுத்து ஓடும் கல்லணை கால்வாய் படித்துறைகளில் இன்று காலை முதலே பொதுமக்கள் குவிய தொடங்கினர். புதுமண தம்பதிகள் தங்களது மாங்கல்யத்தை கோர்த்து புதிதாக அணிந்து கொண்டனர்.

  திருவையாறு காவிரி புஷ்ய மண்டபதுறையில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி கரையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபட்டனர். மேலும், ஆடி மாதத்தில் பிரிந்திருந்த புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர். 'கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும்' என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டினர்.

  பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தீர்த்த குளத்தில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது போட்ட பழைய மாலையை தண்ணீரில் விட்டு பெரியவர்களிடம் ஆசி வாங்கினர். அந்த ஆசியுடன் புதிய மஞ்சள் கயிறு மாற்றி வழிபட்டனர். ஆசியுடன் புதிய மஞ்சள் கயிறு மாற்றி வழிபட்டனர். கும்பகோணம் மகாமககுளத்திலும் ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரையில் பொதுமக்கள் பலர் புனித நீராடி வேதாரண்யேஸ்வர சுவாமியை வழிப்பட்டனர். மயிலாடுதுறை துலா கட்டம், பூம்புகார் கடற்கரைகளிலும் புதுமண தம்பதிகள் குவிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.

  Next Story
  ×