என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் கூடுதல் பள்ளிகள் சேர்ப்பு - மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு
- தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகர கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
- இந்தத் திட்டத்தில் கூடுதலாக 10 பள்ளிகளை சேர்த்து வழங்க ஒருங்கிணைந்த சமையற்கூடம் அமைத்து செயல்படுவதற்கு நிர்வாக அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகர கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசிய தாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்த அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் கீழ் தூத்துக்குடி மாநகராட்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் கூடுதலாக 10 பள்ளிகளை சேர்த்து வழங்க ஒருங்கிணைந்த சமையற் கூடம் அமைத்து செயல்படுவதற்கு நிர்வாக அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
எனவே முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாநகராட்சியின் 10 பள்ளிகளில் படிக்கும் 1,819 மாணவ மாணவிகளுக்கு உணவு தயார் செய்து வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுதியா னவர்களுக்கு ஒப்பந்தம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு திறனை அதிகரிக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும், நாட்டின் அன்றாட நிகழ்வுகளை அறிந்திடவும் சமூக உணர்வினை வளர்த்திடவும் அரசு தேர்வுகளுக்கு தயார் செய்திட ஏதுவாக தினசரி நாளிதழ்கள் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் மூலம் மழைநீர் முள்ளக்காடு ஓடையை அடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து புதிய திட்டங்க ளுக்கு ஒப்புதல் வழங்குவது, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழு தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ்ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி உட்பட அனைத்து கவுன்சி லர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், கமிஷனரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அலுவலர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன்,சேகர், ஹரி கணேஷ் ராஜபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.