search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி உணவகத்தில் இரவு நேர உணவு வழங்க நடவடிக்கை-மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு
    X

    தூத்துக்குடி மாநகராட்சி உணவகத்தில் இரவு நேர உணவு வழங்க நடவடிக்கை-மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

    • தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலையம் இணைந்து 66 ஆயிரம் மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்மா உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகளை மேயர் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் மாநகர மேயராக ஜெகன் பெரியசாமி பதவியேற்ற ஓராண்டினை முன்னிட்டும் 70 ஆயிரம் மரங்கள் நடப்படும் என்று அறிவித்தபடி முதற்கட்டமாக முதற்கட்டமாக 11 ஆயிரம் மரங்கள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நடும் பணி ஏற்கனவே முடிவடைந்துள்ளது. தற்போது மேலும் 66 ஆயிரம் மரங்கள் நடும் பணி தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலையமும் இணைந்து நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான படிவத்தை வனத்துறை அதிகாரிகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகர அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, கந்தசாமி மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து செல்வநாயகபுரம் பிரதான சாலை, ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் மற்றும் டி.எம்.பி.காலனி பகுதியில் தொடங்க உள்ள வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி கமிஷனர் தினேஷ் குமாருடன் சென்று ஆய்வு நடத்தினார்.

    பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட மேயர் மற்றும் கமிஷனர் அங்கு சமைக்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தார். அப்பொழுது மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், பெயர் முக்கியமல்ல. மக்களின் உணர்வு தான் முக்கியம் என்று பாமரர்களின் பசியை போக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணங்களை நிறைவேற்றும் மாநகராட்சி உணவு கூடங்களில் ஓன்றான தூத்துக்குடி மாநகராட்சி உணவகத்தில் தரமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார். அப்பொழுது அங்கு இருந்த மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு உணவு வழங்க ஆவண செய்வதாக கூறினார். ஆய்வின் போது அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×