search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரமாக கேட்பாரற்று கிடக்கும் 1300 வாகனங்களை பறிமுதல் செய்ய அதிரடி நடவடிக்கை
    X

    சாலையோரமாக கேட்பாரற்று கிடக்கும் 1300 வாகனங்களை பறிமுதல் செய்ய அதிரடி நடவடிக்கை

    • கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கண்டுபிடித்து அவைகளை ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு செய்தது.
    • சென்னை வடக்கு மண்டலத்தில் 271 வாகனங்கள் கேட்பாரற்று இருந்தன.

    சென்னை:

    சென்னை மாநகர சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கண்டுபிடித்து அவைகளை ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு செய்தது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் சென்னை மாநகரம் முழுவதும் சாலையோரமாக நீண்ட நாட்களாக 1308 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சாலை யோரமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்து அவைகளை ஏலத்தில் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 16 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோக்கள், 95 நான்கு சக்கர வாகனங்கள் என 132 வாகனங்கள் அப்புறப்ப டுத்தப்பட்டுள்ளன. சென்னை வடக்கு மண்டலத்தில் 271 வாகனங்கள் கேட்பாரற்று இருந்தன.

    இதில் 14 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மத்திய மண்டலத்தில் 644 வாகனங்களில் 101 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தெற்கு மண்டலத்தில் 393 வாகனங்களில் 17 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சாலை ஓரமாக நிறுத்தப்ப ட்டுள்ள வாகனங்கள் வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களா? என்பது பற்றி போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அது போன்ற வாகனங்களின் வழக்குகளை விரைந்து முடித்து அவைகளையும் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் பல தெருக்களில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நெரிசலும் நெருக்கடியும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×