என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் அதிரடி :  குண்டர் சட்டத்தில்   பெண் கஞ்சா வியாபாரி கைது
    X

    கைதான விஜயா

    விழுப்புரத்தில் அதிரடி : குண்டர் சட்டத்தில் பெண் கஞ்சா வியாபாரி கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டேரிப்பட்டு ெரயில்வே மேம்பாலம் அருகே மயிலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சிவஞானம் மனைவி விஜயா (வயது 61) என்பவர்சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டு இருந்தார். அவரை மயிலம் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் கஞ்சா வியாபாரி என தெரியவந்தது.மேலும் அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . தற்பொழுது விழுப்புரம் கே .கே ரோடு ராஜிவ் நகரில் வசிப்பதாகவும் கூறினார்.மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்துகைது செய்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வண்ணம் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரையின் பெயரில் விழுப்புரம் கலெக்டர் மோகன்உத்தரவுக்கிணங்க விஜயா குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×