search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டம்- கோவில்பட்டி கோட்டக் கண்காணிப்பாளர் தகவல்
    X

    அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டம்- கோவில்பட்டி கோட்டக் கண்காணிப்பாளர் தகவல்

    • அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.
    • விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    கோவில்பட்டி:

    அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் (பொ) சிவாஜிகணேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காப்பீடு திட்ட பலன் சாமானிய மக்களை சென்றடையும் வகையில் அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது. இதில் சேர 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எவ்வித காகிதங்கள் பயன்பாடின்றி வீடு தேடி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் பாலிசி திட்டத்தில் இணையலாம். விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    விபத்தில் உள்நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரமும், புறநோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரமும், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் 2 குழந்தைகள் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாளுக்கு தினப் படியாக ரூ.ஆயிரம் வீதம் 9 நாள்களுக்கு கிடைக்கும்.

    விபத்தில் பாதிக்கப்பட்ட வரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயணச் செலவுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இத்தகைய பலன்களை பெற ஆண்டுக்கு ரூ.399 பிரிமியம் செலுத்தினால் போதும், விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

    எனவே, அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×