search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி மாலையம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா
    X

    பெண்கள் மங்களப் பொருட்களுடன் சீர்வரிசை கொண்டு வந்த போது எடுத்த படம்.

    கோவில்பட்டி மாலையம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா

    • ஆடிப்பூர வளைகாப்பு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனை நடைபெற்றது.
    • தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் அலமேலு மங்கா பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து பெண்கள் மங்களப் பொருட்களுடன் சீர்வரிசை கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.

    மங்களப்பொருட்கள்

    இதனை முன்னிட்டு கோவில் நடை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனை நடைபெற்றது. வளைகாப்பு திருவிழாவை முன்னிட்டு தனுஷ்கோடி யாபுரம் தெருவில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் அலமேலு மங்கா பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து பெண்கள் மங்களப் பொருட்களுடன் சீர்வரிசை கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கா பத்மாவதி தாயார் அலங் கரிக்கப்பட்ட பல்லக்கில் கோலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தனலட்சுமி பஐனை குழுவினரின் பக்தி பாடல்கள் முழங்க ஊர்வல மாக வந்து மாலையம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், முன்னாள் தலைவர் பூவலிங்கம், துணைத் தலைவர் பரமசிவம், துணைச்செயலாளர் மணிமாறன், கவுரவ ஆலோசகர் மாதவராஜ், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வாணியர் பேரவை மாவட்ட தலைவர் பழனிகுமார், மாரிக் கண்ணன், மீனாட்சிசுந்தரம், சின்னதம்பி, முனிய செல்வம், நிர்வாக குழு உறுப்பினர்கள், முன்னாள் பொருளாளர் கருப்பசாமி, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், ரமேஷ், மதன், மாரிமுத்து, செல்வா, சுந்தர், மாரிச்செல்வக்குமார், நம்பிராஐன், தங்க மாரி யப்பன், ஸ்ரீமாலையம்மன் பஐனை குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி -அம்பாளை தரிசனம் செய்தனர்.

    பின்னர் அனைவருக்கும் மங்களப் பொருட்கள், இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வணிக வைசிய சமூகத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவில் அருகில் உள்ள பூபதி ரத்தினம் மஹாலில் அன்னதானம் நடைபெற்றது. இதேபோன்று பத்திரகாளி அம்மன் கோவில், செண்பகவல்லி அம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில், மந்திதோப்பு பூமாதேவி கோவில் உள்ளிட்ட ஏராளமான அம்மன் கோவில்களில் வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.

    Next Story
    ×