search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை பள்ளியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி
    X

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    செங்கோட்டை பள்ளியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி

    • இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், நகராட்சி பகுதி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • செங்கோட்டை நகராட்சிக்கு ட்பட்ட 3,4-வது வார்டு பகுதி வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணிகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட பணிகள் வாஞ்சிநாதன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், நகராட்சி பகுதி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்திலோ உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து ெகாள்ளலாம் என அறிவிப்பு வெளியானது.

    இதையொட்டி செங்கோட்டை நகராட்சிக்கு ட்பட்ட 3,4-வது வார்டு பகுதி வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணிகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட பணிகள் வாஞ்சிநாதன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் சுடரொளி ராமதாஸ், ஜெகநாதன் ஆகியோர் ஆதார் எண் இணைப்பு பணிகளை செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×