search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் ஆதார் மையம்- ஒரு மாதமாக பொதுமக்கள் அவதி
    X

    பூட்டிக்கிடக்கும் ஆதார் மையம்.

    ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் ஆதார் மையம்- ஒரு மாதமாக பொதுமக்கள் அவதி

    • ஆதார்கார்டு திருத்தம் உள்ளிட்ட பணிகளை அருகில் உள்ள தபால் நிலையம் சென்று மேற்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.
    • தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்களை மிகவும் அலட்சியமாக பேசுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஆலங்குளம் விளங்கி வருகிறது. இங்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் காய்கனி சந்தை, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், அரிசி ஆலைகள் உள்ளன.

    மேலும் இங்கு சார்பதிவாளர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட வகை ளும் உள்ளன. விரைவில் வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமை க்கப்பட உள்ளது. ஆலங்கு ளத்தை சுற்றிலும் அமைந்து ள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் தேவைகளுக்கு இங்கு தான் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக ஆதார் கார்டு திருத்தம், வருமானச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், ரேசன் கார்டு, பட்டா விண்ணப்பித்தல் உள்ளிட்ட வற்றுக்கும் ஆலங்கும்-தென்காசி சாலையில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு தான் மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்த அலுவலகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சான்றி தழ்கள் விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒரு மாதமாக அந்த மையம் பூட்டியே கிடக்கிறது. பொதுமக்கள் அங்கு வந்து ஏமாந்து திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பாக அங்கு பணியாற்றும் ஊழியர்க ளிடம் கேட்டால், அருகில் உள்ள தபால் நிலையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவற்றில் சென்று ஆதார்கார்டு திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்து கின்றனர்.

    ஆனால் அங்கோ நாளொன்றுக்கு 5 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக திருத்தம் மேற்கொ ள்ளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் குறிப்பாக தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்களை மிகவும் அலட்சியமாக பேசுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    எனவே தாலுகா அலுவலகத்தில் முடங்கி கிடக்கும் மையம் செயல்பட ஏதுவாக உடனடியாக அங்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×