என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டியை ஏமாற்றி 5½ பவுன் நகையை நூதனமாக திருடிய இளம்பெண்
- கடந்த 21 -ம் தேதி வீட்டில் தனியாக இருந்த லட்சுமியிடம் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் அரசு மூலம் மாதம் ரூபாய் 5000 கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
- அப்போது அந்த இளம்பெண் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து பெட்டியில் இருந்த 5½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதி சேர்ந்தவர் லட்சுமி. (வயது 90). இவர் தனது மகள் கலா (56) என்பவருடன் வசித்து வருகிறார்.
கடந்த 21 -ம் தேதி வீட்டில் தனியாக இருந்த லட்சுமியிடம் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வந்து வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வீட்டில் கியாஸ் இணைப்பு புத்தகத்தை கொடுத்தால் அரசு மூலம் மாதம் ரூபாய் 5000 கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லட்சுமி, வீட்டில் இருந்த ஒரு பெட்டியை எடுத்து வந்து அவற்றில் மேற்கண்ட புத்தகங்களை தேடி உள்ளார். அப்போது அந்த இளம்பெண் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து பெட்டியில் இருந்த 5½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






