என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டக்குப்பத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
    X

    கோட்டக்குப்பத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

    • திருமண நாள் முதல் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதிைய சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சிவகாமி (வயது 35). இவர்களுக்குள் திருமண நாள் முதல் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சிவகாமி வீட்டினுள் இருந்த ஒரு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தார், சிவகாமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதித்தனர்.

    அங்கு சிவகாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோது இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சிவகாமி இறந்தார். இது தொடர்பாக கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சுந்த ர்ராஜன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட சிவகாமிக்கு திரும ணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றது. வரதட்சினை கொடுமை யால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×