என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • இரண்டு குழந்தைகள் உள்ளனர்
    • செல்போனில் அழைக்கும் போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது

    குனியமுத்தூர்,

    சுந்தராபுரம் அருகே மாச்சம்பாளையம் குட்டியப்ப கோனார் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது 19 வயது மகள் சுந்தராபுரத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். தற்போது ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது பள்ளி சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அவரது தந்தை நடராஜன் மகளை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

    போத்தனூர் அருகே வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் கார்த்தி (35) இவர் ஏசி மெக்கானிக். தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரி பிரியங்கா (27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு சென்று இருந்த கணவன் வீடு திரும்பாததால், செல்போனில் அழைக்கும் போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    Next Story
    ×