search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி- பரபரப்பு
    X

    கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மேகராஜ்.

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி- பரபரப்பு

    • மண் எண்ணையை உடலில் சரசரவென ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • மேகராஜிடம் இருந்து கேனை பறித்து அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது திருவிடைமருதூர் அருகே உள்ள விஸ்வநாதபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த தொழிலாளி மேகராஜ் (வயது 32) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென அவர் அலுவலகம் முன்பு மறைத்து வைத்திருந்த கேனை வெளியே எடுத்து மண் எண்ணெயை உடலில் சரசரவென ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடி வந்து மேகராஜிடம் இருந்து கேனை பறித்து அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர்.

    எற்காக தற்கொலைக்கு முயன்றீர்கள் என மேகராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதற்கு மேகராஜ் கூறும்போது :-

    எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. எனக்கும் என் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அவர் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். திரும்ப சமதானபடுத்தி அழைப்பதற்காக வீட்டுக்கு சென்றேன். ஆனால் அவர்கள் குடும்பத்தினர் என்னை அவமானப்படுத்தி துரத்தி அனுப்பி விட்டனர். இது குறித்து நான் நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். ஆனால் அங்கு பணிபுரியும் சில போலீசார், பொய் வழக்கு போட்டு விடுவோம் என கூறி என்னை மிரட்டினர். ஏற்கனவே என் மனைவி, குழந்தை என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். அந்த மன வேதனையில் இருக்கும் நான் போலீசார் தற்போது மிரட்டுவதால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.

    இதனை தொடர்ந்து மேகராஜிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக அவரை அங்கிருந்து போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×