search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் புடவையில் ஒரு நடைபயணம் நிகழ்ச்சி
    X

    பெண்களுக்கான புடவையில் ஒர் நடைபயணத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில் புடவையில் ஒரு நடைபயணம் நிகழ்ச்சி

    • அனைத்து பெண்களும் புடவையில் பங்கேற்கும் நடைபயணம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.
    • நடை பயணத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை இன்னர் வீல் சங்கத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு இன்னர்வீல் சங்கமும், வீ.கே.சி. பிரைடு நிறுவனமும் இணைந்து அனைத்து பெண்களும் புடவையில் பங்கேற்கும் நடைபயணம் தஞ்சையில் இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இன்னர்வீல் சங்கத் தலைவர் டாக்டர் சோபியா சோமேஷ், பொன்விழா ஆண்டின் குழு தலைவர் உஷா நந்தினி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    முன்னாள் தலைவர்கள் சங்கீதா திருவேங்கடம், புவனா, நிர்மலா வெங்க டேசன், ஒருங்கிணை ப்பாளர் சண்முகவடிவு, பொருளாளர் ரேகா குபேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரி சுப்பிரமணியம், உறுப்பினர் சுசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நடை பயணத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நடைபயணமானது வரம்பின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

    அதாவது 18 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கு 4 கிலோமீட்டர் தூரமும், 36 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கிலோ மீட்டர், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் நிர்ணயிக்கப்பட்டது.

    அதன்படி மூன்று பிரிவின் கீழ் ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு புடவையில் நடை பயணம் மேற்கொண்டனர்.

    முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    முதல் இரு பிரிவுகளில் முதலிடம் பிடித்த பெண்களுக்கு ரூ.7500, 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.5000, 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2500 ரொக்க பரிசும், 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவில் முதல் இடம் பிடித்த பெண்ணுக்கு ரூ.5000, 2-ம் இடம் பிடித்தவருக்கு ரூ.3000, 3-ம் இடம் பிடித்தவருக்கு ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×