search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் சாலையை கடந்து சென்ற புலி
    X

    ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் சாலையை கடந்து சென்ற புலி

    • சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர்.
    • இதுகுறித்து வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன ஒட்டிகள் புலியை நேரில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டியில் இருந்து மசின குடி செல்லும் கல்லட்டி சாலை வனப்பகுதி வழியாக செல்லும் மலை பாதையாகும். இந்த கல்லட்டி மலை பாதையில் 36-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையை வீடியோ பதிவு செய்தபடி வந்த போது சீகூர் பாலம் அருகில் திடீரென வன பகுதியிலிருந்து புலி ஒன்று சாலையை நோக்கி பாய்ந்து, அடுத்த பகுதியில் இருந்த வனப்பகுதிக்கு சென்றது.

    தீடிரென மின்னலை போல் சாலையை கடந்த புலியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

    Next Story
    ×