என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் நேற்று தீவிரகஞ்சா வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, புஷ்பராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் நேற்று தீவிரகஞ்சா வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த ராஜாப்பாளையம் பகுதியில் மளிகைமேடு கிழக்குத் தெருவை சேர்ந்த சந்தோஷ் (வயது 23) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






