search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் - தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை
    X

    நேதாஜியின் உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் - தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை

    • நேதாஜியின் பிறந்தநாளையொட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பாளை மகராஜநகர் ரெயில்நிலைய சாலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழக அரசின் சார்பில் வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையத்தில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், திருவள்ளுவர் உருவ சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நேதாஜியின் பிறந்தநாளையொட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பாளை மகராஜநகர் ரெயில்நிலைய சாலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தப்பட்டது.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் நேதாஜி பிறந்த நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும், தமிழக அரசின் சார்பில் வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையத்தில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், திருவள்ளுவர் உருவ சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அரசு வக்கீல் புல்லட்ராஜா, அ.தி.மு.க. வக்கீல் அன்புஅங்கப்பன், த.ம.மு.க. மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, த.ம.ஜ.க. மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், நிர்வாகிகள் டேனியல், துரைச்சாமி, டிக்முத்து, முருகேஷ், பரமசிவபாண்டியன், சிவந்தி முத்துவளவன், சிவந்தி அறிவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×