search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டாமுத்தூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம்
    X

    தொண்டாமுத்தூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

    • தென்னை மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது
    • யானை வருவதை எச்சரிக்கும் சைரனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்து கெம்பனூர் பகுதி உள்ளது. இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி வருகின்றன.

    நேற்று இரவு அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கெம்பனூர் பகுதிக்குள் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானை தோட்டங்களில் பயிரிடப்பட்ட சோளம், தக்காளி செடிகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    பின்னர் அங்கிருந்து சென்ற யானை அருகே இருந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான தென்னை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு இருந்த 7 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்து கொண்ட மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருந்து கொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அடிக்கடி யானை ஊருக்குள் வருகிறது. இதனால் அச்சமாக உள்ளது.

    யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க 2 வருடங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் சைரன் வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

    ேமலும் மருதமலை, ஓணாப்பாளையம், அட்டுக்கல் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்துறைனர் நேர்ந்து பணியில் ஈடுபடுவதில்லை. எனவே யானையை கண்காணிக்க வனத்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் யானை வருவதை எச்சரிக்கும் சைரனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×