என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில்  தேயிலை தோட்டத்தை  சுற்றி வரும் ஒற்றை காட்டு யானை
    X

    கோத்தகிரியில் தேயிலை தோட்டத்தை சுற்றி வரும் ஒற்றை காட்டு யானை

    • பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் வருகின்றன.
    • வனப்பகுதிக்கு விரட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு, ஜூன்.20-

    கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியிலிருந்து மலைக் கிராம பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.

    அப்படி வரும் யானைகளில் சில அவ்வப்போது வழி தவறி வேறு கிராம பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை ஒன்று குஞ்சபனை பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக முள்ளூர் கிராம பகுதிக்கு வந்ததுடன் திரும்பி வனப்பகுதிக்கு செல்லாமல் தேயிலை தோட்டத்திற்குள் சுற்றி வருகிறது.

    முள்ளூர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளதால் யானை குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அடர்ந்த வனப்பகுதிக்கு யானையை விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

    Next Story
    ×