என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் மலைப்பாதையில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆ.ராசா எம்.பி. நேரில் ஆய்வு
    X

    குன்னூர் மலைப்பாதையில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆ.ராசா எம்.பி. நேரில் ஆய்வு

    • போலீசார் பஸ் உரிமையாளர், டிரைவர்கள், ஒருங்கிணைப்பாளர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நிவாரண தொகை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த மரப்பா லம் பகுதியில் தென்காசி மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளின் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் பஸ் உரிமையாளர், டிரைவர்கள், ஒருங்கிணைப்பாளர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நீலகிரி எம்.பி., ஆ.ராசா நீலகிரிக்கு விரைந்தார்.

    பின்னர் ஆ.ராசா எம்.பி. குன்னூர் அடுத்த மரப்பா லம் அருகே விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்து, ஊட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    விபத்து ஏற்பட்டவுடன் மாவட்ட அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அவர்க ளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் இறந்தவர்கள், படுகாயம் அடைந்த வர்கள், லேசான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண தொகையினையும் முதல்-அமைச்சர் வழங்க உத்தரவிட்டார். அதன்படி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் அருணா, மாவட்ட வருவாய் அலுவலர் அமு தா, தி.மு.க மாவட்ட செய லாளர் பா.முபாரக், குன்னூர் நகரச் செயலாளர் ராமசாமி, குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் தி.மு.க மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், குன்னூர் நகர இளைஞரணி அமை ப்பாளர் பத்மநாபன் உள்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×