search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே  பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவர் கைது
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவர் கைது

    • வீட்டிற்கு சென்று விட்டு வந்து பார்க்கும் போது வீடு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதி சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வி (வயது 54). இவர் கூலி வேலை செய்து வருகிறார் . சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை வாசலின் மீது வைத்துவிட்டு தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு வந்து பார்க்கும் போது வீடு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் கள்ளுக்கடை மூலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பஸ்ஸில் இருந்து இறங்கிய ஒரு நபர் போலீசை கண்டதும் வேகமாக அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகரை சேர்ந்த அமீர் அப்பாஸ் (45) என்பதும் அவரை திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் சிறுமதுரை சார்ந்த செல்வி வீட்டில் நகை திருடியது தெரியவந்தது .மேலும் அமீர் ஆப்பாஸிடம் சோதனை செய்து 2 பவுன் நகையை பறிமுதல் செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார் அமீர் அப்பாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×