search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்:  அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு
    X

    ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது எடுத்த படம்.

    கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்: அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு

    • வளர்ந்து வரும் தொழில் நகரமான கோவில்பட்டி, மாவட்ட தலைமையிடத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.
    • புதிய மாவட்டங்களை உருவாக்கிட முன் வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் ம.தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து விரைந்து நிறைவேற்றி வரும் தமிழக முதல்-அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் கோவில்பட்டியை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதை ம.தி.மு.க. சார்பில் வரவேற்கின்றேன்.

    வளர்ந்து வரும் தொழில் நகரமான கோவில்பட்டி, மாவட்ட தலைமை யிடத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. கோவில்பட்டி மாவட்டம் வேண்டும் என்பது பொது மக்களும், பல அரசியல் கட்சிகளும், ம.தி.மு.க.வும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும்.

    இந்த மாவட்ட பிரிவினையின் போது, கோவில்பட்டிக்கு மிக அருகாமையில் அமையப் பெற்றுள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பகுதி முழுவதையும் (இளையர சனேந்தல் குறுவட்டப் பகுதி உட்பட) பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க, புதிதாக உருவாக உள்ள கோவில்பட்டி மாவட்டத்தில் இணைத்திட வேண்டுகிறேன்.

    இவை தவிர, கோவில்பட்டி நகரத்துக்கு நேரடித் தொடர்புகளில் உள்ள தென்காசி விருதுநகர், நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதி மக்களின் கருத்துகளையும் கேட்டு இணைத்திட முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    அதே போல், மக்கள் எளிதாக அணுகுவதற்கு வாய்ப்பாக புதிய மாவட்டங்களை உருவாக்கிட முன் வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டு களையும், வாழ்த்துகளையும் ம.தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×