என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
- இன்று அதிகாலை வீராணத்திலிருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குப்பனூர் அடுத்த பூவனூர் பஸ் நிறுத்தும் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
- சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மனோஜ் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் பீர்பாஷா மகன் ஜாகிர் (வயது 23) என்பவருடன் இன்று அதிகாலை வீராணத்திலிருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
குப்பனூர் அடுத்த பூவனூர் பஸ் நிறுத்தும் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த மனோஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மனோஜ் மற்றும் ஜாகீர் ஆகியோர் கொரியர் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நண்பர் ஒருவர், இன்று அதிகாலை சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரை அழைத்துச் சென்று வீராணம் அருகே உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு, சேலத்திற்கு திரும்பும் போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.






