search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீரக சம்பா ரகத்தை விதைப்பு செய்து அதிக விளைச்சல் கண்ட விவசாயி
    X

    விவசாயி குழந்தை வேலு.

    சீரக சம்பா ரகத்தை விதைப்பு செய்து அதிக விளைச்சல் கண்ட விவசாயி

    • சம்பா ரகத்தை விதைப்பு செய்து வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார்.
    • 5000 கிலோ மகசூல் செய்த விவசாயியை அனைவரும் பாராட்டுகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தில் நெல் விவசாயம் முழுவதும் நவீனமயமாக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    அனைத்துக்கும் இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் வேளாண்மை செய்து அதன் மூலம் தரமான நெல்லை அரிசியை தர வேண்டும் என்று ஒரு பக்கம் முன்னெடுப்புடன் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இயற்கை வேளாண்மை முயற்சிகள் விவசாயிகளிடையே முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு சிலர் பரிட்சார்த்தமுறையில் இயற்கை விவசாயத்தை செய்து வருகின்றனர்.

    இது போன்ற ஒரு நிலையில் பூதலூர்- தஞ்சை சாலையில் உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குழந்தைவேலு தன் மகன் பார்த்திபனுடன் இணைந்து தன்னுடைய விவசாய நிலத்தில் அரை ஏக்கர் பரப்பில் மருத்துவ குணம் கொண்ட சீரக சம்பா ரகத்தை விதைப்பு செய்து வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார்.

    அவர் தஞ்சை அருகே உள்ள நடார் கிராமத்தில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் கண்காட்சியில் இலவசமாக வாங்கிய சீரகசம்பாவிதை நெல்லை விதைத்து நல்ல முறையில் அறுவடை செய்துள்ளார்.

    120 நாள் வயதுள்ள சீரகச் சம்பா நெல்லை இவர் தனது வயலின் ஒரு பகுதியில் நேரடி விதைப்பாக விதைப்பு செய்துள்ளார்.விதைப்பு செய்த உடன் எந்தவித ரசாயன உரங்கள் பயன்படுத்தவில்லை.

    ஒரே ஒருமுறை மற்றும் களை எடுத்துள்ளார்.நல்ல நிலையில் வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் ஆட்களை விட்டு அறுத்து வயலிலேயே தார்ப்பாய் போட்டு ஆட்களை கொண்டு அடித்து விளைச்சலை கண்டுள்ளார்.இவர் அரை ஏக்கர் பரப்பில் பயிற்செய்த சீரகசம்பா நெல் 16 மூட்டை மகசூல் கண்டுள்ளது.

    எந்தவித செலவும் இல்லாமல் வேளாண் திருவிழாவில் இலவசமாக வாங்கிய விதையை கொண்டு விதைப்பு செய்து மற்றவர்களுக்கு முன்னதாக அறுவடை செய்து ஏறக்குறைய 5000 கிலோ மகசூல் செய்த விவசாயியை அனைவரும் பாராட்டுகின்றனர்.

    Next Story
    ×