search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றிய கலெக்டர்
    X

    தஞ்சையில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றிய கலெக்டர்

    • அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள ஆசையாகும்.
    • நீங்கள் அரசு வேலை கிடைக்கும் வரை தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை உறுதியாக பற்றி கொள்ளுங்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் அரசின் பல்வேறு நல்ல திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். வாரந்தோறும் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடம்இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்கு டன் தீர்வு கண்டு வருகி றார். இதேபோல் விவசா யிகளிடம் இருந்து பெறப்ப டும் மனுக்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    மேலும் மாற்றுத்திறனா ளிகளும் தங்களதுவாழ்வில் முன்னேற பல்வேறு எடுத்து ள்ளார். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை , கும்பகோணம், பட்டுக்கோட்டைஆகிய 3 இடங்களில் மாற்றுத்தி றனாளிகளுக்கு என்று தனியாக மாவட்டத்திலேயே முதன் முறையாக வேலை வாய்ப்பு முகாம் நடத்த உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தஞ்சையில் இன்று மாற்றுத்திறனாளிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன் , மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் தஞ்சை மற்றும் திருச்சி சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. 72 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் மதியம் 1 மணி நிலவரப்படி 15-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கான பணி நியமன ஆணையை கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி ஊக்கப்ப டுத்தினார் ‌.அப்போது அவர் பேசியதாவது மாற்றுத்திற னாளிகளு க்கு உதவிகள் செய்வது நமது பொறுப்புஅவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். இதற்காக இன்றைய தினம் அவர்களுக்காகவே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களை தேர்ந்தெடுத்த கம்பெனியில் பணிபுரிவர். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைவ ருக்கும் உள்ள ஆசையாகும். நீங்கள் அரசு வேலை கிடைக்கும் வரை தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை உறுதியாக பற்றி கொள்ளுங்கள். உங்களுக்கு தஞ்சாவூர் நகரை ஒட்டி உள்ள கம்பெனிகளிலேயே வேலை கிடைத்துள்ளது. நன்றாக உழைத்து வாழ்வில் முன்னேறுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்வதற்கு தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுடன் கலெக்டர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை மனதார பாராட்டினர்.

    Next Story
    ×