search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் திருமணமான பெண்ணை காட்டி சூலூர் வாலிபரை ஏமாற்றிய புரோக்கர்.
    X

    கோவையில் திருமணமான பெண்ணை காட்டி சூலூர் வாலிபரை ஏமாற்றிய புரோக்கர்.

    • கோவிலில் வைத்து ஒரு பெண்ணை புரோக்கர் காண்பித்தார்.
    • இதுபற்றி வாலிபர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சூலூர்,

    சூலூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பெண் தேடி வந்தார். அவருக்கு 40 வயதை கடந்து விட்டது. இருந்தாலும் பெண் கிடைக்காமல் பல திருமண புரோக்கர்களை நாடினார்.

    அதேபோல ஆனைமலையைச் சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் பற்றி வாலிபருக்கு தெரியவந்தது. அந்த புரோக்கர் தன்னிடம் கேரளாவில் வரன் தேடும் பல பெண்களின் ஜாதகங்கள் உள்ளன, உங்களுக்கு நிச்சயம் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக அவர் தெரிவித்தார்.

    உடனே தனக்கு ரூ.60 ஆயிரம் அனுப்பி வைக்கும்படி புரோக்கர் தெரிவித்தார். வாலிபரும் அவரை நம்பி புரோக்கர் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.60 ஆயிரம் அனுப்பி வைத்தார். அந்த புரோக்கர் மூலம் கேரளாவைச் சேர்ந்த புரோக்கர், சூலூர் வாலிபரை தொடர்பு கொண்டார். நீங்கள் ஆலத்தூர் அருகே மாங்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வாருங்கள், அங்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். உடனே வாலிபரும் கேரளா சென்றார். கோவிலில் வைத்து ஒரு பெண்ணை புரோக்கர் காண்பித்தார். வாலிபருக்கும் பெண்ணை பிடித்து போக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அடுத்தக்கட்டமாக கேரளாவில் இருந்து சிலர் சூலூர் வாலிபரின் வீட்டுக்கு வந்து சென்றனர்.

    அதன்பிறகு வாலிபர், ஆலத்தூர் புரோக்கரையும், பெண் வீட்டினரையும் தொடர்பு கொண்டு திருமணத்தை எப்போது வைத்து கொள்வது என விசாரித்தார். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. உடனே ஆனைமலை புரோக்கரை பிடித்து வாலிபர் விசாரித்தார். அதற்கு அவர் வாலிபர் கொடுத்த பணத்தை கேரளாவைச் சேர்ந்த புரோக்கருக்கு கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.

    உடனே வாலிபர் கேரளாவுக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது அந்த பெண் வீட்டார் கொடுத்த முகவரி போலி என்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண் திருமணம் ஆனவர் என்பதும், வாலிபரை ஏமாற்ற மணப்பெ ண்ணாக காட்டியதும் தெரியவந்தது. பணம் பறிக்கும் நோக்கத்தில் ஆலத்தூர் புரோக்கர் மற்றும் பெண் குடும்பத்தினர் நாடகமாடிய விவரம் தெரியவந்தது.

    இதுபற்றி ஆலத்தூர் புரோக்கரை தொடர்பு கொண்டு வாலிபர் பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால் அவர் பணம் திருப்பி கொடுக்க மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி வாலிபர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×