என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்- ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட்டம்
  X

  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்- ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியபோது அவன் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்று தெரியவந்தது.
  • போலீசாரின் அலட்சியம் காரணமாகவே விக்னேஷ் தப்பி ஓடி விட்டதாக கூறி பொதுமக்கள் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் திரண்டனர்.

  சென்னை:

  சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த சிறுமி இரவில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த சிறுமி திடீரென்று அழுதார். சிறுமியின் சத்தம் கேட்டு தாய் எழுந்து கூச்சல் போட்டார்.

  இதனால் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். உடனே சிறுமியின் பெற்றோரும், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்களும் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனது கை கால்களை கட்டி பட்டினப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

  போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியபோது அவன் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்று தெரியவந்தது. அவன் கஞ்சா போதையில் இருந்தான். பொதுமக்கள் தாக்கியதால் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

  இதையடுத்து அவனை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டான்.

  போலீசாரின் அலட்சியம் காரணமாகவே விக்னேஷ் தப்பி ஓடி விட்டதாக கூறி பொதுமக்கள் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் திரண்டனர். அங்கு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தப்பி ஓடிய வாலிபரை விரைவில் பிடித்து விடுவதாக அவர்களிடம் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

  Next Story
  ×