search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  ெரயில் நிலையத்தில் தடுப்பு கட்டை அமைக்கும்பணியை தடுத்து நிறுத்த திரண்ட பொதுமக்கள்
    X

    கடலூர் குப்பன்குளம் செல்லும் பாதையை அடைத்த ெரயில்வே நிர்வாக அதிகாரியிடம் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா தலைமையில் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடலூரில் ெரயில் நிலையத்தில் தடுப்பு கட்டை அமைக்கும்பணியை தடுத்து நிறுத்த திரண்ட பொதுமக்கள்

    பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் ெரயில் நிலையம் அருகே குப்பன் குளம் பகுதி உள்ளது.இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ெரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று காலை ெரயில் நிலையம் ஓரமாக தடுப்பு கட்டை அமைக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக பலகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதனை பார்த்த குப்பன் குளம் சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ெரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் பணியை தடுத்து நிறுத்த திரண்டு வந்தனர். இத்தகவல் அறிந்த மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, கவுன்சிலர் தஷ்ணா, அ.தி.மு.க.நிர்வாகி நாகராஜன் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில் ெரயில் நிலைய அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம். மேலும் இவ்வழியாக தான் கார், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனம் போன்றவற்றை வந்து செல்கின்றன. தற்போது திடீரென்று ெரயில்வே நிர்வாகம் தடுப்பு கட்டை அமைத்தால் எந்த வாகனமும் குப்பன் குளத்திற்கு வர முடியாத அவல நிலை ஏற்படும். ஆகையால் அனைத்து வாகனங்களும் வந்து செல்லும் நடவடிக்கையாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ெரயில்வே துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து பதில் தெரிவிக்கின்றோம் என உத்தரவாதம் அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×