என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி எம்.பி. விஜய் வசந்த்
நாகர்கோவிலில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீக்காயம் அடைந்தவர்களுக்கு குமரி எம்.பி. விஜய் வசந்த் நேரில் உதவி
- நாகர்கோவில் அருகே டீக் கடையில் கேஸ்சிலிண்டர் வெடித்தது.
- காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவம் கொண்ட மெத்தைகளை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது கியாஸ் சிலிண்டர் விபத்து குறித்து அறிந்த குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
தீக்காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவம் கொண்ட மெத்தைகளை அவர் வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், மருத்துவ அதிகாரி ரினிமோள், மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
Next Story






