search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75-வது சுதந்திர தின பூங்கா - கலெக்டர் திறந்து வைத்தார்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    75-வது சுதந்திர தின பூங்கா - கலெக்டர் திறந்து வைத்தார்

    • பூங்கா முழுவதும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டது.
    • பூங்காவிற்கு 75-வது சுதந்திர தின பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் ஊராட்சி சார்பில் பூங்கா கட்டப்பட்டது. இந்த பூங்காவிற்கு 75-வது சுதந்திர தின பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த பூங்கா திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி ஊராட்சி தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன், துணைத் தலைவர் சிங் .சரவணன், பாஸ்கரன், உதவி இயக்குனர் (ஊராட்சி)சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 75-வது சுதந்திர தின பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் பூங்காவில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். பூங்கா முழுவதும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டது. இதை அடுத்து நீலகிரி ஊராட்சிக்கு 2 குப்பைகளும் வாகனங்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

    இந்த விழாவில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் மணிகண்டன், டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×