என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான 2 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.
கடையநல்லூரில் திருட்டு வழக்கில் கைதான 2 பேரிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- நம்பர் பலகை இல்லாமல் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- தொடர் விசாரணையில் அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரியவந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அட்டைகுளம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக நம்பர் பலகை இல்லாமல் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடையநல்லூரை சேர்ந்த அக்பர் அலி என்பதும், அது திருடிவரப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.
மேலும் தொடர் விசாரணையில் அவர் கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும், அதனை அவர் பொட்டல்புதூரை சேர்ந்த ஷேக் அலி என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
Next Story