என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் விபத்தில் சிக்கிய பஸ்-7 பேர் காயம்
- 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சீனிவாசபுரம் ெரயில்வே தரைப்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது.
- எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக உரசியது.
பொள்ளாச்சி:
-
சர்க்கார்பதியில் இருந்து பொள்ளாச்சிக்கு இன்று காலை அரசு பஸ் சென்றது.
30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் சீனிவாசபுரம் ெரயில்வே தரைப்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சியிலிருந்து திருச்சூர் செல்லும் சிமெண்ட் லாரி தனக்கு முன்னால் வந்த வாகனத்தை முந்த முயன்றது.
இதில் எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக உரசியது. லாரி உரசுவதை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் சுரேஷ்குமார் பஸ்சை இடது புறமாக திருப்பினார்.
அப்போது தரை பாலத்தின் பக்கவாட்டில் அரசு பஸ்சின் முன்பக்கம் மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த 7 பேர் லேசான காயம் அடைந்தனர். லாரி டிரைவர் முஹம்மது சாலி என்பவரிடம் பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






