என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முதியவர்கள் உள்பட 6 பேர் கைது
    X

    லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முதியவர்கள் உள்பட 6 பேர் கைது

    • 941 லாட்டரிகள் - ரூ.48,070 பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கோவை

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி கோவை புறநகர் பகுதியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தந்த பகுதயில் சோதனை நடத்தினர். வடக்கிப்பாளையம் போலீசார் தேவம்பட்டி வலசு பகுதியில் சோதனை செய்த போது அந்த பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 58) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 45 லாட்டரி மற்றும் ரூ.420-யை பறிமுதல் செய்தனர். டி.காளிப்பாளையம் பகுதியில் லாட்டரி விற்ற ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த தங்கராஜ் (68) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 லாட்டரி மற்றும் ரூ.300-யை பறிமுதல் செய்தனர்.

    மதுக்கரை போலீசார் போடிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு லாட்டரி விற்ற ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்த மோகன் ராஜ் (39) என்பவரை கைது செய்து 10 லாட்டரி மற்றும் ரூ.1650-யை பறிமுதல் செய்னர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜரர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி தாலுகா போலீசார் கோபாலபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையின் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திண்டுகல்லை சேர்ந்த நேசமணி (62) என்பரை 418 லாட்டரியுடம் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.200-யை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோன்று சோதனை சாவடியில் 360 கேரளா லாட்டரியுடன் வந்த திண்டுகல்லை சேர்ந்த கிருஸ்டோபர் (52) மற்றும் 60 லாட்டரியுடன் வந்த உடுமலையை சேர்ந்த கணேஷ் (52) என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஸ்டோபரிடம் இருந்து ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் முதியவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு ரூ.48,070 மற்றும் 941 லாட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×