search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு : விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் மின் இணைப்பு துண்டிப்பு - அதிகாரி தகவல்
    X

    தென்காசி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு : விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் மின் இணைப்பு துண்டிப்பு - அதிகாரி தகவல்

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க நில உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து வருகின்றனர்.
    • மின் வேலி அமைக்கும் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மின்வேலி

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத் துவதை தவிர்க்கவும், தங்கள் நிலங்களில் பிறர் அத்துமீறி நுழைவதை தடுக்கும் நோக்கத்தில் நில உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து வருகின்றனர்.

    இதனால் விலங்குகளும், மனிதர்களும் மின் வேலியில் சிக்கி உயிரிழக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும் மின்வேலி அமைப்பது இந்திய மின்சார சட்டம் 2003 படி தண்டணைக்குரிய குற்றமாகும். எனவே அவ்வாறு மின் வேலி அமைக்கும் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்படு வதுடன் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மின் இணைப்பு துண்டிப்பு

    கடந்த 3-ந் தேதி விரகேரளம்புதூர் அருகே உள்ள கீலக்கலங்கல் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஒரு விவசாயி பரிதாபமான உயிரிழந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் மின் வேலி அமைத்தவர் கைது செய்யப்பட்டார்.

    இதேபோல் கடந்த ஆண்டு மாயமான்குறிச்சி, ராசிகபேரி, வண்ணந்துறை, தெற்குப்பட்டி, சித்தார் சத்திரம் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலிகளால் விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரி ழந்துள்ளனர்.

    இந்த வழக்குகளிலும் மின் இணைப்பு துண்டிக்க பட்டதுடன் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாய நிலத்தில் மின் வேலி அமைப்பதை நில உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×