என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
  X

  ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிகளில் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த நகைகள்,பணம், வெள்ளிப் பாத்திரங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.
  • 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ைளயடித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதி களில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சுமார் 4 வீடுகளில் புகுந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த நகைகள்,பணம், வெள்ளிப் பாத்திரங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.

  இந்த பரபரப்பு அடங்கும் முன் மர்மநபர்கள் மீண்டும் 5 கடைகளில் கைவரிைச காட்டி உள்ளனர். நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் ேஜடர்பாளையம் கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு கடையிலும், ஆனங்கூர் மெயின் ரோட்டில் உள்ள 2 மளிகை கடைகளின் ஷட்டரின் பூட்டை உடைத்து ஒரு மளிகை கடையில் ரூ. 10 ஆயிரத்தையும் மற்றொரு மளிகை கடையில் இருந்த பொருட்களையும் மர்ம நபர்கள் அள்ளிக் கொண்டு சென்று விட்டனர். அதேபோல் பிலிக்கல் பாளையத்தில் உள்ள 2 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர்.

  இது குறித்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஜேடர் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ைளயடித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×