search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதின் மூலம் 5 பேர் பயன்- மருத்துவக்கல்லூரி டீன் பேட்டி
    X

    தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதின் மூலம் 5 பேர் பயன்- மருத்துவக்கல்லூரி டீன் பேட்டி

    • குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
    • சிறுநீரகங்கள் மற்றும் இதய வால்வுகள் ஆகிய உறுப்புகள் தானமாக பெற்றுக் கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று டீன் பாலாஜிநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிரு ப்பதாவது

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஆண் கடந்த 3-ம் தேதி சாலை விபத்து ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளை செயலிழப்பு ஏற்பட்டு மூளை சாவு அடைந்தார்.

    இதையடுத்து மருத்துவ மனை சார்பாக அவரது குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அவர்க ளும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அடைந்தனர்.

    இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்து ஒப்புதல் அளி த்தனர்.

    அதன்படி அவரது கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதய வால்வுகள் ஆகிய உறுப்புகளை தானம் பெற்றுக் கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாகதமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    எனது தலைமையிலான மருத்துவ குழு மற்றும் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட குழுக்களுடன் ஒருங்கிணைந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

    இதய வால்வுகள் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சாலை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு சாலை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    சோதனையான காலகட்ட த்திலும் இறந்தவரின் குடும்பத்தினர் இறந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்தது பாராட்டுக்கு உரியது. உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் பலரை வாழ வைக்கலாம். உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மருது துரை, பாலகிருஷ்ணன், லியோ, கந்தசாமி, காந்தி மற்றும் பல டாக்டர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

    தஞ்சை மருத்துவ கல்லூரியில் முதன் முதலில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து 1585 பேரிடம் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 9483 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×