என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான கார் 5 பேர் படுகாயம்

- அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.
- தடுப்புச் சுவரில் மோதி அதிர்ஷ்டவசமாக நின்றதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது
ஊட்டி,
கும்பகோணத்தில் இருந்து 2 சிறுவா்கள் உட்பட 5 போ், காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அதன்பிறகு அவர்கள் மீண்டும் கும்பகோணம் திரும்பிக் கொண்டு இருந்தனா். குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, 10-வது கொண்டை ஊசி வளைவில் கார் வந்தது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் இருந்த 5 போ் படுகாயம் அடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 5 பேரையும் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஊட்டியில் இருந்த திரும்பிய காரில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அந்த வாகனம் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது. அப்போது தடுப்புச் சுவரில் மோதி அதிர்ஷ்டவசமாக நின்றதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது என்பது தெரியவந்து உள்ளது.