search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில்  48,132 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்- முதன்மை கல்வி அதிகாரி தகவல்
    X

    பாறையடி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் கற்கும் திறனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருப்பதி பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 48,132 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்- முதன்மை கல்வி அதிகாரி தகவல்

    • தொடக்க நிலைய மையத்தில் மாணவ, மாணவிகள் 25,529 பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
    • இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படித்த 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 11 வட்டாரங்களிலும் தொடக்க நிலை மையம் 1319 ம் (1 முதல் 5-ம் வகுப்பு), உயர் தொடக்க நிலை மையம் 936-ம் (5 முதல் 8 வகுப்பு) ஆக மொத்தம் 2,265 மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையங்களில் தொடக்க நிலைய மையத்தில் மாணவ, மாணவிகள் 25,529 பேரும், உயர் தொடக்க நிலை மையத்தில் மாணவ, மாணவிகள் 18,603 பேரும் என மொத்தம் 48,132 பேர் பயன்பெற்று வருகிறார்கள்.

    தச்சநல்லூர், ஊருடையாள் குடியிருப்பு மற்றும் பாறையடி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மையங்களில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் மாணவர்கள் கற்கும் திறனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவத்ததாவது:-

    கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெ ய்வத ற்காக தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடி கல்வி' என்னும் திட்டம் கொண்டு வரப்பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அனைத்து செயல்பாடுகளுக்காக மாவட்டத்தில் திறமை, அர்ப்பணிப்பு, ஆர்வம், சமூக அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் அனுபவம் பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பண்புகளை பெற்ற ஆசிரியர்களில், கல்வி மாவட்ட அளவில் ஒரு ஆசிரியரும், ஒன்றிய அளவில் 2 ஆசிரியர்களும் இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்காக முழு நேரமாக செயல்பட மாவட்ட அளவினை குழுவின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

    இத்திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களை அன்றாடம் சுழற்சி முறையில் மையங்களுக்கு சென்று பார்வையிட்டு கற்கும் குழந்தைகளையும், தன்னார்வலர்களையும் மையங்களில் நடைபெறும் செயல்பாடுகள் குறிப்பிட்டு பாராட்டி உற்சாகப்படுத்துதல் வேண்டும். மேலும் அச்செயல்பாடுகளை மேம்படுத்த தன்னார்வ லர்களுக்கு வேண்டிய ஆலோச னைகளும் வழங்குதல் வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய திறனாய்வு தேர்வில் நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படித்த 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உதவி திட்ட அலுவலர் சிவராஜ், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கி ணைப்பாளர் நம்பிராஜன், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோ அகஸ்டின், தன்னார்வலர் உமா, நாகலட்சுமி, முருகேஸ்வரி, சத்தியவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×