search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,235 வழக்குகள் விசாரணை
    X

    மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குமரகுரு தலைமையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 

    நெல்லையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,235 வழக்குகள் விசாரணை

    • நெல்லை மாவட்டத்தில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நெல்லை உள்பட 9 தாலுகாக்களில் நடத்தப்பட்டது
    • 4,235 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்கள் ஆகிய வங்கிக்கடன் உள்ளிட்ட 2000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன

    நெல்லை:

    மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில் 2023 -ம் ஆண்டுக்கான முதலாவது தேசிய மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நெல்லை உள்பட 9 தாலுகாக்களில் நடத்தப்பட்டது. இதற்காக 26 அமர்வுகள் நியமிக்கப்பட்டனர்.

    பாளையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் தலைவருமான குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, போக்சோ நீதிபதி அன்பு செல்வி மற்றும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் பன்னீர்செல்வம், திருமகள், குடும்ப நல நீதிபதி குமரேசன், மகளிர் நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ் குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்த வேலு, கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு நீதிபதி மோகன்ராம், ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிபதி செந்தில் முரளி, நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தானம், 2-வது கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி வள்ளியம்மாள் மற்றும் நீதிபதிகள் திருவேணி, ஆறுமுகம், விஜய் பாக்யராஜ், கவிப்பிரியா, அருண்குமார், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் வக்கீல்கள், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் முத்து சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்பட மொத்தம் 4235 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்கள் ஆகிய வங்கிக் கடன் உள்ளிட்ட 2000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    Next Story
    ×