search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 42 கிலோ ஓலைவெடிகள் பறிமுதல்: பெண் கைது-கணவன் மீது வழக்கு
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ஓலை வெடிகள்.

    வீட்டில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 42 கிலோ ஓலைவெடிகள் பறிமுதல்: பெண் கைது-கணவன் மீது வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் அனுமதியின்றி ஓலை வெடிகள் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • மகேஷ் தலைமறைவாகி விட்ட நிலையில் வீட்டில் இருந்த ராதா கைது செய்யப்பட்டார்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள பரைகோடு பகுதியில் வீட்டில் வைத்து வெடி பொருட்கள் தயாரிக்கப்படுவதாக, தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் போலீசாருடன் சென்று அதிரடி சோதனை நடத்தினார்.

    அப்போது பாட்டவிளாகம் பகுதியில் மகேஷ் (வயது 49) என்பவரது வீட்டில் வெடிபொருட்கள் இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் அனுமதியின்றி ஓலை வெடிகள் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாக்குமூடைகளில் இருந்த அந்த வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 42 கிலோ ஓலைவெடிகள், 3 மூடைகளில் இருந்தது.

    இதனை தொடர்ந்து மகேஷ் அவரது மனைவி ராதா (44) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மகேஷ் தலைமறைவாகி விட்ட நிலையில் வீட்டில் இருந்த ராதா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×