என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாறை அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது
    X

    கோப்பு படம்

    பெரும்பாறை அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது

    • பீடி ஓசி தராத ஆத்திரத்தில் கும்பல் வாலிபர் மற்றும் குடும்பத்தினரை தாகத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
    • புகாரின் பேரில் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    பெரும்பாறை அருகே குத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி(27). கூலித்தொழிலாளி. இவரிடம் புதூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(24) மற்றும் அவரது நண்பர்கள் ஓசியில் பீடி வாங்கி தருமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு பாண்டி தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டின் கதவை உடைத்தனர். இதை தடுக்க வந்த பாண்டியின் தந்தை-தாய், உறவினர்களை தாக்கினர்.

    இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அருண்குமார், அஜித்குமார், ஜெகன்நாத் மற்றொரு அஜித்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×