என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிண்டி-அம்பத்தூர்-சேலத்தில் 364 அடுக்குமாடி தொழிற்கூடங்கள்: முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்கிறார்
  X

  கிண்டி-அம்பத்தூர்-சேலத்தில் 364 அடுக்குமாடி தொழிற்கூடங்கள்: முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவின் தமிழ்நாடு ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
  • தமிழ்நாடு, 49 லட்சம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களை கொண்டு தொழில் துறையில் இந்தியாவிலேயே 3-வது மிகப் பெரிய மாநிலமாக விளங்குகிறது.

  சென்னை:

  சென்னையில் ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நிலையான கிளஸ்டர் மேம்பாடு குறித்து விவாதிக்க நடைபெற்ற கருத்தரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது கூறியதாவது:-

  பெரும் தொழிற்சாலைகளே ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்ற நிலை மாறி இன்று எம்.எஸ்.எம்.இ. தொழில்களே நாட்டின் பொருளாதாரத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் என்ற நிலை உருவாகி உள்ளது.

  தமிழ்நாடு, 49 லட்சம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களை கொண்டு தொழில் துறையில் இந்தியாவிலேயே 3-வது மிகப் பெரிய மாநிலமாக விளங்குகிறது.

  இந்தியாவின் தமிழ்நாடு ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பாக ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58 சதவீதம், காலணி ஏற்றுமதியில் 45 சதவீதம், மின்னணு இயந்திரங்கள் மின்னணு சாதனங்களில் 25 சதவீதம் என பல்வேறு துறைகளில் தமிழ்நாடு தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.

  புதிய தொழிற்பேட்டை அமைக்க நகர்ப்புறங்களில் போதிய நிலம் இல்லாத காரணத்தினாலும், நிலத்திற்கான முதலீட்டினை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது.

  இந்த திட்டத்தின் கீழ், கிண்டி ரூ.90.13 கோடியில்152 தொழில் கூடங்கள், அம்பத்தூர் ரூ.60.55 கோடியில்112 தொழில் கூடங்கள், சேலம் ரூ.24.50 கோடியில் 100 தொழில் கூடங்கள் என மொத்தம், ரூ.175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 364 தொழில் கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×