என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள் கைது- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- பாளை கக்கன் நகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
- நம்பி நாராயணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளை கக்கன் நகர் மேம்பாலம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த பாளை திம்மராஜபுரத்தை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 26), நம்பி நாராயணன்(21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன்(22) ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து அரிவாள், வாள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார்
3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






